Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிச்சிகிட்டே ஒரு Trip - சூப்பர் chance!

மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசிச்சிகிட்டே ஒரு Trip - சூப்பர் chance!
விஸ்டாடோம் பெட்டி இணைக்கப்பட்ட மதுரை-குருவாரூர் ரயிலை வழியனுப்பிவைத்தார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.

தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக மதுரை – குருவாயூர் ரயிலில் சோதனை அடிப்படையில் விஸ்டாடோம் ரயில் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதிதாக விஸ்டாடோம் ரயில் பெட்டி இணைக்கப்பட்டு நேற்று முதல் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக மதுரை – குருவாயூர் ரயிலில் சோதனை அடிப்படையில் விஸ்டாடோம் ரயில் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இனிப்பு வழங்கி வழியனுப்பி வைத்தார். 

இந்தியாவில் இயற்கை அழகை ரசித்தபடி ரயிலில் பயணம் செய்ய பிரசித்திபெற்ற பல வழித்தடங்கள் உள்ளன. அதன்படி, இயற்கை அழகுகள் நிறைந்த வழித்தடமாக செங்கோட்டை – புனலூர் இடையிலான சுமார் 50 கிமீ ரயில் பாதை அமைந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வளைவு பாலங்கள், சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட இயற்கை மற்றும் பழங்கால கட்டிடக்கலை அம்சங்களை இந்த வழித்தடத்தில் ரசிக்க முடியும்.

இயற்கையின் அழகை 380 டிகிரி கோணத்தில் ரசிப்பதை போன்ற தோற்றத்தை விஸ்டாடோம் ரயில் பெட்டி வழங்கும். தற்போது 3 மாத கால சோதனை அடிப்படையில் இந்த பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
கோட்டக் பயோனியர் ஃபண்ட் தொடக்கம் முதல் 20.97% வருவாய்
அடுத்த செய்தி
13 feet python rescued near Gudiyatham

தொடர்புடைய செய்திகள்